தற்கொலை எண்ணம் வந்தது – ரொபின் உத்தப்பா

Jun 05, 2020 11:49 am

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் தமக்கு வந்தது என்று இந்திய் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், .பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காகவும் விளையாடும் 34 வயதான ரோபின் உத்தப்பா, ராஜஸ்தான் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையதள உரையாடலின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான் தினசரி மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொண்டேன். அத்துடன் தற்கொலை எண்ணமும் தொடர்ச்சியாக தோன்றியது. அந்த நேரங்களில் நான் கிரிக்கெட் பற்றி கூட சிந்திப்பது கிடையாது. அப்போது எனது மனதில் கிரிக்கெட் தொலைதூரத்துக்கு போய்விடும் என்றும் ரொபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.

Read next: சுற்றுலாத்துறையின் மூலம் 150 கோடி டொலர் வருமானம்