டோக்கியோ ஒலிம்பிக் - கௌன் டௌன் ஐ ஆரம்பிப்பதற்குரிய நிகழ்ச்சி ரத்து?

Jun 05, 2020 10:40 am

Photo: Twitter

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இத்தனை நாட்கள் இருக்கின்றன என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் கௌன் டௌன் (Count-down) ஆரம்பிப்பதற்குரிய நிகழ்ச்சி ரத்துச் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டோக்கியோ ஏற்பாட்டுக்குழு பரிசீலித்து வருவதாக ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்தும் வியாபித்து வருவதால்  கௌன் டௌன் (Count-down)  நிகழ்ச்சியை நடத்த முடியாதென ஏற்பாட்டுக்குழு கருதுகிறது.

இந்த நோய் தொற்றுக் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் பரா-ஒலிம்பிக் போட்டிகளும் பின்போடப்பட்டன.

இந்த நிலையில், இந்தப் போட்டிகளை அடுத்தாண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பிக்க திகதி குறிக்கப்பட்டுள்ளது.

Read next: பூமிக்கு அருகில் இராட்சத விண்கற்கள்