எளிமையான முறையில் ஒலிம்பிக்?

Jun 04, 2020 12:55 pm

Photo: Twitter

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முற்றிலும் ரத்து செய்வதற்குப் பதிலாக, அவற்றை எளிமையாக்குவது குறித்து ஜப்பான் பரிசீலிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் உள்ளுர் செய்தி சேவை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கொரோனா அபாயம் எப்போது நீங்கும் என்பதைக் கணிக்க முடியாத சூழலில், முற்றிலும் மாறுபட்ட விளையாட்டுகளைப் பற்றி ஏற்பாட்டாளர்கள் திட்டமிடவேண்டும் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் டோக்கியோவுக்கான கண்காணிப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவும் சூழல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது..

Read next: ஜெர்மனி உச்சி மாநாடு ரத்து