ஆசிய வங்கி இந்தியாவுக்கு 3 மில்லியன் டாலர் நிதி உதவி

1 week

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்தியாவுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.22.48 கோடி) நிதி வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய பசிபிக் பேரிடர் மேலாண்மை நிதி தொகுப்பில் இருந்து இந்த நிதி வழங்கப்பட உள்ளது

மருத்துவ கருவிகள் வாங்கவும், கொரோனா சிகிச்சை அளிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வங்கி, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read next: ஓரிகான் - போர்ட்லேண்ட் எதிர்ப்புக்கள்: 62 நாட்களுக்குப்பின் படைகளை வெளியேற்ற டிரம்ப் தயார்