நைஜர் ராணுவத் தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Feb 24, 2020 09:27 am

நைஜர்: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படையினர் இணைந்து நடத்திய ஒரு அதிரடித் தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகஅந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள மாலி, பா்கினோ ஃபாஸோ ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படையினர் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவத்தினர் தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read next: ஐ.நா. தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்: பிப். 26ல் அதிகாரபூர்வ அறிப்பு