தமிழ் நாட்டில் இன்று 2184 தொற்றுகளும் 28 கோவிட் மரணங்களும் பதிவாகியது

2 weeks

இன்று தமிழக சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி புதிதாக 2184 தொற்றுகள் ஏற்பட்டுளளதாகவும் அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 28 கோவிட் தொற்றின் காரணமாக இறந்ததாகவும் அறிவித்துள்ளது. புதிதாக பதிவுசெய்யப்பட்ட தொற்றுகளையும் சேர்த்து தமிழகத்தில் உறுதிசெய்யப்பட்ட தொற்றுகள் எண்ணிக்கை 750,00 தாண்டி 750,409 ஆக உள்ளது.

இறப்புகளை பொறுத்தவரை தமிழத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட 28 மரணங்களையும் சேர்த்து சேர்த்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 11,415.ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் மூவர் தமது முப்பதுக்கும் நாற்பது வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அறிய வருகிறது. இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்றும் மற்றய இருவரும் ஆண்கள் என்று அரசின் தகவலில் இருந்து தெரியவருகிறது

Read next: மிக மேசமான முதல் மாநிலமாக டெக்சாஸ் மாறியது