டொராண்டோவில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கார்த்திக்

Nov 28, 2022 05:38 am

கனடாவில் சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியரான கார்த்திக் சைனி என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

20 வயதான இளைஞன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் வீதியை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. 

மேலும் சில மீட்டர் தூரத்துக்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். இந்த கோர விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் கனடா சென்றதாக அவரது உறவுக்காரர் பர்வீன் சைனி தெரிவித்துள்ளார்.

கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்ய கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவரது குடும்பத்தினர் நம்புவதாக பர்வீன் சைனி தெரிவித்தார்.


Read next: புதுக்கோட்டை மேல ராஜவீதியில் உள்ள வர்த்தக சங்க மண்டபத்தில் மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் நலச் சங்க 18 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது