கனடாவில் தொடரும் கத்திக்குத்து தாக்குதல்! மேலும் இருவர் பலி

Sep 21, 2022 09:26 pm

வடக்கு எட்டோபிகோக்கில் நடந்த இரட்டைக் கத்திக்குத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.

இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வார்டுக்கு அருகிலுள்ள 27 பெர்கமோட் அவென்யூவில், அதிகாலை 1:40 மணியளவில், கத்தியால் குத்தப்பட்டதாகக் கிடைத்த தகவல்களுக்கு டொராண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். மற்றொரு நபர் கடுமையான உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


உயிரிழந்த இருவர் ஆண் மற்றும் ஒரு பெண் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்கள் தங்கள் மகனால் குத்தப்பட்ட தம்பதிகள் என்று நம்புவதாக அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாவும், மேலும் சந்தேக நபர்கள் யாரும் தேடப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடு முழுவதும் பல இடங்களில் அண்மைய நாட்களாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதில் பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்கதக்து.

Read next: உக்ரைனில் ஐநா சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா வெட்கமின்றி மீறியுள்ளது : பைடன்