மாலியில் வன்முறை: 40 பேர் கொலை

Feb 17, 2020 08:58 am

Photo: Ferdinand Reus from Arnhem, Holland

மாலி: வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் இரு இனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது  பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 40 போ் கொல்லப்பட்டனர். என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 30 உறுப்பினர் கொண்ட ஒரு ஆயுதமேந்திய குழு, ஃபுலானி இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் ஓகோசாகோ கிராமத்தை தாக்கி, வீடுகள், பயிர்கள் மற்றும் கால்நடைகளை எரித்து, 31 பேரைக் கொன்றனர்.

காவோ பிராந்தியத்தில் ஒரு இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் எட்டு இராணுவ வீரர்கள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் டோகோன் இன ஆயுதக் குழு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.  கடந்த 2012-ல் நாட்டின் வடபகுதியில் ஒரு இஸ்லாமிய கிளர்ச்சி வெடித்ததிலிருந்து மாலியில் பதற்றம் நிலவுகிறது.

கடந்த மார்ச் மாதம், ஒகோசாகோவில் நடந்த மற்றொரு தாக்குதலில் 160 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read next: Video: டயமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் இருந்து அமெரிக்க பயணிகள் மீட்பு