Video: சிலியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு தாக்குதல்

Feb 16, 2020 08:29 am

வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். சிலியின் தேசிய காவல்துறையினர் கராபினெரோஸ், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை சுட்டதை இங்கு உள்ளடக்கப்பட்டுள்ள  காணொளி காட்சிகள் காட்டுகிறது. 


அக்டோபர் முதல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களால் சிலி உலுக்கியது. இந்த ஆர்ப்பாட்டங்கள் புகையிரத  கட்டணங்களை உயர்வுகளை திரும்பப் பெறக் கூறி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தது. ஜனாதிபதி செபாஸ்டியன் பினெராவின் கொள்கைகள் மற்றும் வளர்ந்து வரும் சமூகத்தில் காணப்படும் சமத்துவமின்மை ஆகியவற்றின் மீதான விரக்தியால் இந்த போராட்டங்கள் தூண்டப்பட்டுள்ளது.

Read next: கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் 1665 பேர்