சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் ஒப்படைக்கப்படலாம்!

1 year

Photo: Al Jazeera English

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அவர்கள் விரும்புவோர் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று சூடான் ஒப்புக்கொண்டுள்ளது. இதில் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர்அவர்களின் (Omar al-Bashir) பெயர் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. 

சூடானின் இடைக்கால அதிகாரிகளும் டார்பூர் கிளர்ச்சிக் குழுக்களும் தெற்கு சூடானின் ஜூபாவில் பேச்சுவார்த்தை நடந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அந்த பிராந்தியத்தில் நடைபெற்ற குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) விரும்புவோர் தீர்ப்பாயத்தின் முன் ஆஜராக வேண்டும் என்று சூடானின் இடைக்கால அதிகாரிகள் மற்றும் டார்பூரிலிருந்து கிளர்ச்சிக் குழுக்களும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவில் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர் கொலை, லஞ்சம் வாங்கியது மற்றும் 1989இல் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தது தொடர்பாக விசாரணை செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. சவூதி அரச குடும்பத்தினரிடம் இருந்து பெரும்தொகையான லஞ்சம் பெற்றதாகவும் இவர் மேல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

Read next: Video: கொரோனா வைரஸ் பொது மக்களின் முதல் எதிரி-உலக சுகாதார அமைப்பு