ஆடையின்றி இரத்த காயங்களுடன் நடந்து வந்த 15 வயது சிறுமி - அதிர வைத்த பின்னணி

Sep 22, 2022 01:15 pm

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த காயத்துடன் ஆடையில்லாமல் நடந்து வந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளானார். அதன் பின்னர் அந்த கும்பல் சிறுமியை ஆடையில்லாமல் காரில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி ஆடையில்லாமல் இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியை சாலையில் பார்த்த யாரும் அவரை விசாரிக்கவோ, உதவவோ முன்வரவில்லை. மாறாக பலர் சிறுமியை வீடியோ எடுத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ இந்த சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீடு திரும்பிய சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல்நிலையம் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், கொடூரத்தை நிகழ்த்திய கும்பல் மீது புகார் அளித்தனர். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 7ஆம் திகதி இந்த சம்பவம் தொடரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த நிலையில், குறித்த சிறுமி பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, அவர் கடத்தப்பட்டு இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

https://twitter.com/AITCSanghamitra/status/1572638692443037697?s=20&t=gMmcDmN3Cp1mcmFiDwayow

Read next: மஹிந்தவின் மலசல கூடத்துக்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய்!