தமிழகத்தின் திண்டுக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Jan 24, 2023 06:08 pm

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை மலைப் பகுதியில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறுமலை மலைப் பகுதியில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். 18வது வளைவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Read next: நியூசிலாந்தில் இரு இந்தியர்கள் நீரில் மூழ்கிப் பலி