இரவு இடம்பெற்ற கோர விபத்து! 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

1 week

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 

இதில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்னது.

பிரயாக்ராஜ்-லக்னோ நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

அதிவேகமாக சென்று மோதியதால், காரின் முன்பகுதி கடுமையாக சிதைந்து, லாரியில் சிக்கிக்கொண்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

கேஸ் கட்டர் உதவியுடன் காரின் பாகங்களை வெட்டி எடுத்து உள்ளே இருந்தவர்களை சடலமாக மீட்டனர். 

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

Read next: இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.