சீனாவில் வரலாறு காணாத அழிவு! ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு

Jul 21, 2021 09:15 am

மத்திய சீனாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹெனான் மாகாணத்தில் ஒரு மாகாண தலைநகர் ஜெங்ஜோ உட்பட ஒரு டஜன் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் அதிக அளவு நீர் நிரம்பியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை வெள்ள நிலைமை மிகவும் கடுமையானது என்றும்  முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் கூறினார்.

வெள்ளத்தால் ஏற்கனவே கணிசமான உயிர் இழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 94 மில்லியன் மக்கள் வசிக்கும் ஹெனான் மாகாணம் அதன் மிக உயர்ந்த வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

உள்ளூர் அதிகாரிகள் வெள்ளத்தை 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.

Read next: கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணம் !