பிரான்ஸில் வேகமாக அதிகரிக்கும் 10 உணவு பொருட்களின் விலைகள்

May 12, 2022 05:26 pm

பிரான்ஸில் பாஸ்தா, மாவு, எண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலைகள் ஒட்டுமொத்தமாக அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதனை தவிர்த்துபிற பொதுவான பொருட்களின் விலை ஏப்ரல் மாதத்தில் 2.89 சதவீதம் அதிகரித்துள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

பெப்ரவி மாதத்தில் 0.58 சதவீதம் மற்றும் மார்ச் மாதத்தில் 1.49 சதவீதம் உயர்வுகளுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுவதாக குறிப்பிடப்படுகின்றது.

சுப்பர் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கொள்வனவு செய்யும் உணவு, சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பொருட்கள் ஆகிய முக்கிய பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை மாத்திரம் 3.01 சதவீதத்தை எட்டியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உணர்வானது தற்போது வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் வகைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த உயர்வு மேலும் அதிகரிக்கும் என வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புகளின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாஸ்தா 15.31 சதவீதம் உயர்வடைந்துள்ளதுட்,  உறைந்த இறைச்சி 11.33 சதவீதமும் கோதுமை மாவு 10.93 சதவீதமும், எண்ணெய் வகைகள் 9.98 சதவீதமும், கடுகு 9.26 சதவீதமும், வறுத்த கோப்பி 8.16 சதவீதமும், உலர்ந்த பழங்கள் 8.16 சதவீதமும், வெட்டப்பட்ட இறைச்சி 7.91 சதவீதமும், பாஸ்தா அடிப்படையிலான உணவுகள் 7.67 சதவீதமும், தானியங்கள் மற்றும் ரவை 7.47 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.

பிரான்ஸின் தற்போதைய நிலைமையை பொருத்த வரையில் இந்த 10 பொருட்களின் விலைகளே மிக வேகமாக அதிகரித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களின் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் அதனை முடிந்த அளவு கட்டுப்படுத்துவதற்கு சுப்பர் மார்க்கெட்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.


Read next: தொழில்நுட்ப வீழ்ச்சியால் 27.5 பில்லியன் டாலரை இழந்த ஹாங்காங் சாஃப்ட் பேங்க்