05 செப்டம்பர் 2022 திங்கள்

Sep 05, 2022 05:25 am

வரலாற்றில் இன்று 

05 செப்டம்பர் 2022-திங்கள்

1697 : பிரெஞ்சுப்  போர்க்கப்பல் ஹட்சன் குடாவில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தன.

1698 : ரஷ்யப் பேரரசர் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி விதித்தார்.

1798 : பிரான்ஸில் ராணுவ சேவை கட்டாயமாக்கப் பட்டது.

1799 : பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது .

1857 : சென்னையில் சென்னைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

1880 : ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் வண்டி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1881 : மிக்சிகனில் இடம்பெற்ற தீயினால் 282 பேர் உயிரிழந்தனர்.

1882 : அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயார்க் நகரில் இடம்பெற்றது. 

1887 : இங்கிலாந்தில் எக்ஸிடெர் நகரில் ராயல் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் இறந்தனர்.

1902 : இலங்கையில் சாவகச்சேரிக்கும், பளைக்கும் இடையே 14 மைல் நீளமான ரயில் பாதை திறக்கப்பட்டது.

1914 : முதலாம் உலகப்போர்:- பாரிஸின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.

1932 : இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பதிப்பு மதுரையில் இருந்து வெளிவந்தது.

1972 : ஜெர்மனியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்ற இஸ்ரேல் வீரர்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1977 : அமெரிக்கா வாயேஜர்-1 விண்கலத்தை ஏவியது.

1978 : யமுனை நதிக்கரை உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1980 : உலகின் மிக நீளமான  (16 கி.மீ.) நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.

1984 : டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பியது.

1986 : மத்திய அரசு போபால் நீதிமன்றத்தில் அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு எதிராக நஷ்ட ஈடு வழக்கைப் பதிவு செய்தது.

மும்பையில் இருந்து சென்ற அமெரிக்க விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.

1990 : மட்டக்களப்பு, வந்தாறுமூலைப்  பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1991 : பழங்குடியினரைப் பாதுகாக்கும் பன்னாட்டு உடன்பாடு நடைமுறைக்கு வந்தது .

1996 : அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தை சூறாவளித் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர்.

2005 : சுமத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் உயிரிழந்தனர்.

2008 : கரீபியன் தீவான ஹெயிட்டியில் சூறாவளித் தாக்கத்தில் சிக்கி 500 பேர் இறந்தனர்.

2012 : துருக்கியில் ராணுவக் களஞ்சியத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் 25 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

Read next: வஉசி பிறந்தநாள்