பிரித்தனியாவில் சுய தொழிலாளர்கள் அரசாங்த்திடமிருந்து தொடர்ந்து உதவியைப் பெற முடியுமா?

Sep 25, 2020 11:18 am

சான்சலரினால் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் சுய தொழிலாளர்களுக்குத் தொடர்ந்தும் அரசாங்க உதவிகள் வழங்கப்படும்.

தொழிலில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்றே சுய தொழிலிலாளர்களுக்கான  உதவித்திட்டம் வழங்கப்படும் நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் சிலக்குழுக்களால் இது பெற்றுக்கொள்வது இழக்கப்படும்.

எவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன?

வசந்தகாலத்திற்கான நடவடிக்கைகளைச் சான்சலர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

வருமானத்தைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திப்பவர்களுக்கு வரி செலுத்துவதில் மானியம் வழங்கடுகின்றது. மாதாந்தம் 2500 பவுண்டுகள் வருமானத்தில் 80 வீதமாக இது அமைகின்றது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 2018 – 2019 நிதியாண்டில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்தச் சுய தொழில் உதவித்திட்டம் பங்களிப்பு வழங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இலாபத்தில் 70 வீதத்தை  மாதாந்தம் 2190பவுண்டுகளாகவும் மொத்தமாக மூன்று மாதங்களுக்கு 6570 பவுண்டுகளாக  வசந்த கால முழுவதும் இரண்டாவது மற்றும் இறுதி கொடுப்பனவு அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் ஒரு தொகுதி கொடுப்பனவு சுமார் 2.6 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் எவை?

சுய தொழிலாளர்களுக்குப் புதிய ஒத்துழைப்பை வழங்குவதையே சான்சலரின் குளிர்கால பொருளாதார திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முந்தைய கொடுப்பனவை விடவும் இம்முறை குறைந்தளவான தொகையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட வரி மானிய திட்டமானது மாதாந்த வருமானத்தில் 20 வீதமாகக் காணப்படும். மூன்று மாதங்களுக்கும் மொத்தமாக 1875 பவுண்டுகள் ஒரே தவணையில் செலுத்தப்படும்.

இரண்டாவது மானியம் 2021 பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை வழங்கப்படும். என்றாலும் இதற்கான தொகை இன்னும் மதிப்பிடப்படவில்லை.

 இதற்குத் தகுதியுடையவர்கள்?

பயனாளர்கள் வருமானத்தில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சுயதொழில் மூலம் வருவாயைப் பெறுபவராக இருத்தல்.

2018 – 19 ஆண்டில் வர்த்தக செயற்பாட்டில் 50,000பவுண்டுகளுக்கு  குறைந்த வருமானத்தைப் பெறுபவராக இருத்தல்.

அல்லது 2016 17 2017 – 18 மற்றும் 2018 – 19 ஆண்டுகளிலிருந்து சராசரி வருமானம் ஐம்பதாயிரம் பவுண்டுகளாக இருத்தல்.

இந்தத் திட்டத்தின் கீழ் புதிய சுய தொழில் முயற்சியாளர்களுக்கு இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள். இவர்கள் வருமான வரியைச் செலுத்தியிருக்க வாய்ப்பில்லை என்பதுடன் இவர்களது சுய தொழிலில் நிலைத் தொடர்பில் அரசாங்கம் அறிந்திராமையினால் திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

2022 ஜனவரி மாதம் வரை வரியைச் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Read next: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது