சீனாவில் 25 மாணவர்களுக்கு நஞ்சூட்டிய ஆசிரியைக்கு மரண தண்டனை

3 weeks

சீனாவில் பாலர் பாடசாலை ஒன்றில் 25 சிறுவர்களுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் வாங் யுன் என்ற அந்த ஆசிரியையே கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஜியாசு நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் சிறுவர்கள் காலையில் சாப்பிட்ட கஞ்சில் விஷம் கலக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஆசிரியையுடன் மோதலில் ஈடுபட்ட அவர் அதற்கு பழிதீர்ப்பதற்கு தமது பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவில் சோடியம் நைட்ரைட்டை கலந்து கொடுத்திருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

23 மாணவர்கள் காலை உணவுக்குப் பின் வாந்தி எடுத்ததாகவும் மயங்கி விழுந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது. இதில் ஒரு மாணவர் 10 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரியில் உயிரிழந்தார்.

வாங் யுன் மேலும் சில முறை மற்றவர்களுக்கு நஞ்சூட்டியதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. அவர் தமது கணவருக்கே விஷம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. அவர் அதிக ஆபத்தின்றித் தப்பினார்.

வாங்கின் ஈவிரக்கமற்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனை தேவை என நீதிமன்றம் தெரிவித்தது.

Read next: கடும் வாதப்பிரதிவாதங்களுடன் கடுமையாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட டிரம்ப் - பைடன்