தைவானின் அதிநவீன போர் விமானம் மாயம்! தேடும் பணி தீவிரம்

2 weeks

தைவானின் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.

போர் விமானங்கள் வானில் பறந்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பின்னர் மீண்டும் தளத்திற்கு திரும்பும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டுந்தன.

அப்போது, 44 வயதுடைய விமானியான கர்னல் ஜியாங் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. 

மேலும், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது.

இதையடுத்து, மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். 

போர் விமானம் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனாலும், விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போர் விமானம் மாயமானதையடுத்து, பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 150-க்கும் அதிகமான எப் 16 ரக போர் விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

Read next: பஸ்ஸில் வந்த பயங்கரவாதிகள்! நெடுச்சாலை முடக்கம் - நீடிக்கும் பதற்றம்