மக்காவில் முதற் தடவையாக பெண் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில்

Jul 21, 2021 05:55 pm

மக்காவில்  முதற் தடவையாக பெண் இராணுவ வீராங்கனைகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் முதல் மக்கா மற்றும் மதீனாவில் பத்துக்கும் மேற்பட்ட பெண் இராணுவத்தினர் வருடாந்த ஹஜ் கடமைகளில் ஈடுபடுவோருக்கான பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழமைவாத இஸ்லாமிய இராஜ்ஜியத்தில் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை ஏற்படுத்தும் வகையிலும் வெளிநாட்டு முதலீடுகளை கவரும் வகையிலும் பல திட்டங்களை சவூதி மன்னர் மொஹமட் பின் சல்மான் முன்வைத்திருந்தார்.

2030 நோக்கு எனும்  அவரது புதிய சீர்திருத்தத்தில் பெண்கள் வாகனங்கள் செலுத்துவதற்கான தடையை நீக்கியுள்ளதுடன் பாதுகாவலரின்றி யுவதிகள் வெளியில் பயணிக்கவும் அனுமதிக்கப்பட உள்ளது.


Read next: பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு மருந்து தொடர்பான தரவுகள்