இலங்கை அரச ஊழியர்களுக்கு அமுலாகும் புதிய நடைமுறை! மகிழ்ச்சியில் ஊழியர்கள்

Nov 27, 2022 12:55 am

இலங்கையில்அரசதுறை ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில்  உள்ள அலுவலகங்களை பணிக்கு ஒதுக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு  அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பஸ்களில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


Read next: பிரான்ஸில் விறகு பயன்படுத்தும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை