அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்.

3 weeks

நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாசலில் கோலமிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது துளசேந்திரபுரம் கிராமம் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஷின் முன்னோர்கள் வாழ்ந்த கிராமமாகும். இந்திய வம்சாவளியை சேர்ந்த  நான்கு பேர் நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தலில் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேல் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் பதவிக்கும் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்ம் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க தேர்தல் முடிவுற்ற நிலையில் வாக்கு எண்ணும் பணி நேற்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று துணை அதிபராக வர வேண்டும் என அவரது பூர்வீக கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக கமல ஹேரிஸ் குலதெய்வ கோயிலில் கூட்டுப் பிரார்த்தனைகள் சிறப்பு வழிபாடுகள் அபிஷேகம் அன்னதானம் என பல்வேறு வழிபாடுகளை செய்து கொண்டாடி வருகின்றனர் அந்த கிராம மக்கள். அந்த வகையில் இன்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அமெரிக்காவின் தேர்தல் நிலவரங்களை பார்த்தவாறும் , அதில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் ஜனநாயக கட்சி முன்னிலையில் இருப்பதால் கமல ஹரிஷ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் தங்கள் வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டு கமலா ஹரிஷுக்கு We wish Kamala Harris என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Read next: கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்த உத்தேசம்.