வைத்திசாலையில் உள்ளவர்களுக்கு ரெம்டிசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்-உலக சுகாதார அமைப்பு

2 weeks

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களுக்கு கிலெட்ஸ் ரெம்டிசிவிர் (புடைநயன சநஅனநளiஎசை ) எனும் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மருந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதற்கு எந்தவித சான்றுகளும் இல்லை என்பதோடு செயற்கை சுவாசத்தை பொருத்துவதற்கான தேவையை குறைக்காது எனவும் சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

கிலெட்ஸ் ரெம்டிசிவிர் மருந்தானது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு பயன்படுத்தப்பட்டதன் பின்னர் அது சாதகமான பெறுபேறுகளை வெளிக்காட்டியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் கிலெட்ஸ் ரெம்டிசிவிர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு பயன்படுத்த முடியாது என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்தாக வெக்லுரி எனப்படும் மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பானது தமக்கு ஏமாற்றமளித்துள்ளதாக (புடைநயன சநஅனநளiஎசை) மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிலெட்ஸ் ரெம்டிசிவிர் மருந்து தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை தாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சில நாடுகள் (புடைநயன சநஅனநளiஎசை) தடுப்பு மருந்தை கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தி வருகின்ற நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் அது பயன்பாட்டுக்கு வரவில்லை. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகள் கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் கிலெட்ஸ் ரெம்டிசிவிர் மருந்தும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Read next: பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை விட சுவீடனில் தனிநபர் தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.