கனடாவில் நடந்த கோர விபத்து - ஒருவர் பரிதாபமாக பலி

Nov 23, 2022 03:49 pm

டொரான்ரோவின் கிழக்கு முனையில் ஒரு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Markham எல்லையில் உள்ள Scarboroughவில் உள்ள Steeles Avenue East மற்றும் Sewells Road பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரண்டு ஆண்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் வேகம் காரணமா என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

Read next: தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள தகவல்