பயண தடையை தளர்த்தியது ஐரோப்பா

2 days

54 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணிப்பதற்கு, ஜூலை 1ஆம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளித்துள்ளது.

நான்கு மாதகால பயணத் தடைகளுக்குப் பின்னர் வரைவு பட்டியல் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், இலங்கையின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளை மீண்டும் திறப்பதன் மூலம் இந்த 54 நாடுகளும் பயனடைகின்றன.

எனினும், ஒவ்வொரு நாட்டினதும் தொற்றுநோயியல் நிலைமை, கொரோனா வைரஸ், ஆகியவற்றை கவனத்திலெடுத்து, அந்த பட்டியலின் பிரகாரம் வரைவு பட்டியல் புதுப்பிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஏற்றுக்கொண்டால். அது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதற்கு உள்ளக செயன்முறையொன்று உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எரிக் மாமர், அதன் முடிவுகள் சுகாதார அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றார்.

 

Read next: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்று உரையாற்ற உள்ளார்.