பதில் பொலிஸ்மா அதிபருக்காக தான் ஆஜராகமாட்டேன்

2 days

நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்துள்ள ரிட்மனுவில் பதில் பொலிஸ்மா அதிபருக்காக தான் ஆஜராகமாட்டேன் என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் பதில் பொலிஸ்மா அதிபர் செயற்படுவதில்லை. ஆகையால் அவர் சார்பில் ஆஜராகாமல் இருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளாரென சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சந்தேகநபராக தனது பெயரையும் இணைந்துகொண்டமையை சவாலுக்குட்படுத்தி எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தாக்கல் செய்திருந்த ரிட்மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (29) அழைக்கப்பட்டது.

அதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சார்பில் தான் ஆஜராகுவதில்லை என்றார்.

Read next: பயண தடையை தளர்த்தியது ஐரோப்பா