எவ்வித இணக்கப்பாடும் மேற்கொள்ளப்படவில்லை

2 days

அரசாங்கம் ஆட்சி அமைத்ததன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதாக எவ்வித இணக்கப்பாடும் மேற்கொள்ளப்படவில்லையென, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடன் உடன்டிக்கை  மேற்கொள்ளவில்லை மாறாக கட்சியுடனேயே,  உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது எனத் தெரித்தார்.

மைத்திரிபால சிறிசேன தரப்பில் உள்ள குழுக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில்  எவ்விதம் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகுமெனத் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது  ஒரு சதமேனும் நம்பிக்கை வைக்க முடியாதெனவும் தெரிவித்தார்

Read next: பதில் பொலிஸ்மா அதிபருக்காக தான் ஆஜராகமாட்டேன்