ரணிலின் தேவைக்கருதியே அர்ஜூன நியமிக்கப்பட்டார்

2 days

மத்திய வங்கி ஆளுநராக, கடந்த ஆட்சிக்காலத்தில், அர்ஜூன மஹேந்திரனை நியமித்தமையானது, ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கருதியே என, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மஹேந்திரனை பரிந்துரைத்தபோது, தானும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறினார்.

எனினும், அர்ஜூன மஹேந்திரன் குறித்து தான் முழுமையாகப் பொறுப்பேற்பதாக ரணில் விக்கிரமசிங்க அன்று கூறியதாக, பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், மத்திய வங்கியில்  இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.

Read next: எவ்வித இணக்கப்பாடும் மேற்கொள்ளப்படவில்லை