மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

2 days

மாவனெல்ல நகரில் 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 23ஆம் திகதி புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 16 பேரும் இன்று(29) மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்கள் ஜூலை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உபுல் ராஜகருணா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களால் 2018 டிசெம்பர் 23, 26ஆம் திகதிகளில் மாவனெல்ல, ஹிங்குல, லிந்துலவத்த உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபர்கள் கேகாலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: ரணிலின் தேவைக்கருதியே அர்ஜூன நியமிக்கப்பட்டார்