இலங்கையின் கோழி இறைச்சி ஓமானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது

1 week

இலங்கையில் தயாரிக்கப்படும் கோழி இறைச்சிகளை மத்திய கிழக்கு நாடான ஓமானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஓமான் அல் ஹமாட் அன்ட் கன்ட்ரக்ட் எல்.எல்.சி நிறுவனம் ஊடாக விற்பனை செய்ய, இலங்கையின் பிரபல கோழி இறைச்சி நிறுவனமான கிறிஸ்ப்ரோ குளிரூட்டப்பட்ட  இறைச்சி விற்பனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார இராஜதந்திர வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலங்கையின் பாமிஸ் பிரைட் என்ற தனியார் நிறுவனம் ஓமானுக்கு 30 மெட்றிக் தொன் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Read next: மாவனெல்ல புத்தர் சிலை விவகாரம்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு