நிதி நிறுவனங்களில் வைப்பாளர்களுக்கு நீதியை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

1 week

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள ETI மற்றும் பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில், இன்றே சட்ட ஆலோசனைகளைப் பெற்று, வைப்பாளர்களுக்கு நீதியை வழங்குமாறு,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் மத்திய வங்கி, திறைசேறி மற்றும் வைப்பாளர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை உருவாக்கிமேலதிக நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ETI மற்றும் பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நிதி செலுத்தல் நடைபெறும் முறையை ஆராய்ந்து பார்ப்பதற்காக இன்று (29) இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கை ஜனாதிபதி மேறெ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போதுமத்திய வங்கி குறித்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதுடன், இந்த 2 நிறுவனங்களிடமும் காணப்படும் சகல சொத்துகளையும் கையகப்படுத்தி ஏனைய கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பவர்களுயுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும் இலங்கை ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Read next: இலங்கையின் கோழி இறைச்சி ஓமானுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது