எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உள்ளது கோவா காங்கிரஸ்.

2 days

                                                                                    

அகில இந்திய காங்கிரஸ் குழு (AICC) வெகுஜன எதிர்ப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியானது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்பதனால், ஜூன் 29 ஆம் திகதி அன்று மாநில அளவிலான ஒரு சான்று விளக்கத்தை கோவாவின் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி இருப்பதாக மாநில கட்சி முதல்வர் கிரிஷ் சவுதங்கர் கூறினார்.

எரிபொருள் விலை உயர்வை குறைக்க கோரி, மார்கோவில் உள்ள தெற்கு கோவா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மபுசாவில் உள்ள துணை ஆட்சியர் அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் அனைத்து முக்கிய குழுக்களும் இணைந்து காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தொண்டர்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் பாதுகாப்பான முகாகவசமும் அணிந்திருப்பார்கள் என்று கிரிஷ் சவுதங்கர் கூறினார்.

 அந்த மாவட்டத்தின் நீதிபதிகள் மூலம் ராம் நாத் கோவிந்திடம் கோரிக்கையை உரைத்த பின் ஆர்ப்பாட்டம்  முடிவடைந்தது.

அதே நாளில் . . சி. சி யின் சமூக வலைத்தள குழு பெட்ரோல் விலை உயர்வை பற்றி பேசுங்கள் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் கணினி மூலம் நேரடிப் பிரச்சாரம் செய்தது. பேருந்து, டிரக், வாடகை மோட்டார்வாகனம் , மற்றும் டிரால்ர் உரிமையாளர்கள், விவசாயிகள், ரிக்ஸா ஓட்டுனர்கள்,மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள், நான்கு சக்கர/இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் சம்பள வர்க்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அவலங்களை குறிப்பிட்டு பதிவுகளும் நேரடி வீடியோக்களையும் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பதிவிட்டதாக கிரிஷ் சவுதங்கர் கூறினார்.

கடந்த 23 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி, மக்கள் மீது பெரும் சுமையை வைத்தது மத்திய அரசாங்கம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கூறுகிறார்.

பிஜேபி அரசாங்கம் டீசல் மீது 820 சதவீதமும்,பெட்ரோல் மீது 258 சதவீதமும் வரியை அதிகப்படுத்தியது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் குறைவாக இருப்பினும்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மத்திய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 18 லட்சம் கோடி சேர்ந்துவிட்டது.குறைவான விலையுள்ள கொள்முதலில் பயனை மக்களுக்கு கொடுப்பதை விடுத்து,அரசாங்கம் வரியை அதிகப்படுத்தி விலையையும் மெதுவாக உயர்த்தி வருகின்றது. என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர்,மத்திய அரசின் வரியை சேர்த்து கூடுதலாக பெட்ரோல் மீது 25 சதவீதமும் டீசல் மீது 22 சதவீதம் ஆக மதிப்பு கூட்டு வரியை (VAT) சேர்த்து அதிகரித்துவிட்டது கோவா அரசாங்கம் என்று கூறினார்.

 

Read next: செல்பி எடுக்கச் சென்ற மணமகன் சடலமாக மீட்பு