சீனாவின் வடமேல் நகரில் மணற்புயல் தாக்கம்

1 week

சீனாவின் ஹோட்டன் நகரில் மணற்புயல் வீசியுள்ளது.சீனாவின் தன்னாட்சி பகுதியான க்ஸிஜியாங் உய்குர் பகுதியிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பலமாக வீசிய காற்று மணல் மற்றும் தூசுகளை அடித்துச் சென்றுள்ளது.9 என்ற அதிகபட்ச வேக மட்டத்தில் இந்த மணற்புயல் வீசியுள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பார்க்க முடியாத அளவுக்கு மணலும் தூசும் கலந்தாற் போல் சூழல் காட்சியளித்துள்ளது.50 மீற்றர் வரையேனும் தெளிவற்று காணப்பட்டமையினால் ஹெட்லைட்டை ஒளிரச்செய்யுமாறு வாகனக சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

யுட்டியான் பகுதியில் ஏற்பட்ட இந்த மணற்புயல் காரணமாக மக்கள் அதிர்ச்சிக்குள்ளானதுடன் முழு நகரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணற்புயல் வீசுவது குறையும் வரை தானியக்க வாகனங்கள் செலுத்தவதை சற்று தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.

மிகவும் பலத்த மணற்புயல் என்றும்,பிரகாசமாக இருந்த சூழல் கண்சிமிட்டுவதற்குள் இருள் சூழ்ந்தாற் போல் காட்சியளித்தாகவும் கண்களை முழுமையாக திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்வும் கண்களை முழுமையாக திறக்க முடியாத நிலை  மற்றும் சுவாசிப்பதில் சிரமமும் ஏற்பட்டிருந்ததாகவும் பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன நேரப்படி இரவு 9 மணிக்கு மணற்புயலின் வேகம் குறைந்தவுடன் போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பியுள்ளது.

 

 

 

 

 

 

Read next: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உள்ளது கோவா காங்கிரஸ்.