அவுஸ்திரேலியாவில் 2 மாதங்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளது.

2 days

அவுஸ்திரேலியாவின் அதிக சனத்தொகையை கொண்ட மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் விக்டோரியாவில் இன்று முதல் மீண்டும் சமூக இடைவெளி பின்பற்றுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தில் ஒரு நாளில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பல மாநிலங்கள் மற்றும் நில எல்லைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்படாத நிலையில் தமது மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக விக்டோரியா குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 11 ஆம் திகதியிலிருந்து ஒரு நாளில் பதிவாக அதிக எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பெருமளவான மருத்துவ பரிசோதனைகளை விக்டோரியா முன்னெடுக்கின்றது.அதேவேளை சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக மாநில பிரத சுகாதார அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெற வேண்டும் என தெரிவித்து கட்டுப்பாடுகளை தளர்த்துதற்கு பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அழைப்பு விடுத்துள்ளார்.

Read next: கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றக சேவையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.