“நான் நலமுடன் இருக்கின்றேன்” நிரூபித்துக்காட்டினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

2 days

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலமுடன் இருப்பதை  தரையில் புஸ் அப் எடுத்துக் காட்டி  நிரூபித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கடந்த ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்கு பின் ஏப்.,12ல் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று டெய்லி மெய்ல் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது, நான் கசாப்புக்கடைகாரரின் நாய் போன்று ஆரோக்கியமாக இருப்பதாக கூறிய ஜான்சன், நீங்கள் விரும்பினால் புஸ் அப் எடுத்து காட்டுகிறேன் என வெள்ளை சட்டை, டை அணிந்திருந்த நிலையில், தரையில் இறங்கி கைகளால் புஸ் அப் எடுத்து காட்டினார்.

போரிஸ் ஜான்சன் புஸ் அப் எடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களிலும் வைரலானது.

மேலும் பிரிட்டனில் இதுவரை 311,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 ஆயிரத்து 550 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா தொற்றை கையாள்வதில் பல்வேறு விமர்சனங்களை போரிஸ் ஜான்சன் அரசு எதிர்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற வித்தைகள் பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பை ஒருபோதும் குறைக்காது எனவும் சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

Read next: சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்பின் வீடியோ ட்வீட்