பள்ளிகள், கல்லூரிகளில் புனரமைப்பு திட்டங்களுக்கு 1 பில்லியன் நிதி

3 days

கொரோனா வைரஸிலிருந்து நாடு மீளும் என்ற நம்பிக்கையில், பிரதமர் ஜான்சன் பள்ளிகளுக்கான 10 ஆண்டு புனரமைப்பு திட்டங்களை திங்கள்கிழமை அறிவிப்பார் என தெரிகிறது.

கொரோனாவிலிருந்து நாட்டை மீட்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செவ்வாயன்று ஜான்சன் இந்த உள்கட்டமைப்பு திட்டத்தை குறித்து உரை நிகழ்த்துவார், தான் வெற்றியடைவதற்கு உதவிய தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

புதிய செலவினங்களில் பெரும்பகுதி வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் முக்கியமாக பாரம்பரியமாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை ஆதரித்த பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும், ஆனால் கடந்த தேர்தலில் இப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆளும் கன்சர்வேடிவ்களையே ஆதரித்தனர்.

அரசாங்க செலவின குறைப்பால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளை மறுகட்டமைப்பது அவரது முதல் படியாக இருக்கும், இங்கிலாந்தில், குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் மிக மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களை இலக்காகக் கொண்டு நிதி ஒதுக்கப்படவுள்ளது.

நாம் தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும்போது அனைவரும் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரு நாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பது முக்கியம். முக்கியமாக எங்கள் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தை மையப்படுத்தி அமைக்க வேண்டும் என்று ஜான்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மறுகட்டமைப்பு திட்டம் 2020-2021 ஆம் ஆண்டில், முதல் கட்டமாக 50 திட்டங்களுடன் தொடங்கும், சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது,

சுமார் 560 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 200 மில்லியன் பவுண்டுகள் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடுகளுக்கு செலவிடப்படும். பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடுகளுக்கான 560 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 200 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்.

இந்த பெரிய புதிய முதலீடு, எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்யும், சிறந்த வசதிகள் மற்றும் புதிய கட்டிடங்களுடன் ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும் என்று ஜான்சன் கூறினார்.

Read next: ஒரு இனத்திற்கு மட்டும் நாட்டை சொந்தமாக்க அரசு முயற்சி – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி!