ஹொங்கொங் தொடர்பான பாதுகாப்பு சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரும் சீனா

3 days

13வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவான சீன உயர்மட்ட சட்டவல்லுநர்கள் தமது 20 வது அமர்வை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

பல சட்டமூலங்கள் மற்றும்,குற்றவியல் சட்டத்தில் திருத்தம் போன்றன தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படும்.

புதிய சட்ட மூலம் மதிப்பாய்வு அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மீளாய்வு செய்யப்பட்ட அல்லது புதிய 30 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் குப்பைக்கூளங்கள் , தொற்று நோயை ஏற்படுத்தும் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கான தண்டனைகள்,நிதி மோசடி மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் சட்டங்களை பலப்படுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன.

மற்றைய திருத்தச்சட்டம் ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு தொடர்பானது.பாதுகாப்பு,ஏற்றுமதி கட்டுப்பாடு,நிரவாக தண்டனை,உணவு மற்றும் மருந்துவ பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியனவும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எந்தவிதமான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த சட்டமன்ற அமர்வானது இன்று ஆரம்பித்து செவ்வாய் கிழமை முழுவதும் நடைபெறும்.

Read next: கொவிட்-19: மாலைதீவிலிருந்து 179 பேர் வருகை