பங்களாதேஷ் - டாக்காவில் கோர விபத்து! குழந்தைகள் உட்பட 23 பேர் பரிதாபமாகப் பலி

3 days

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று (ஜூன் 29) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்தபோது படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்குவர் என்றும் சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்தபோதும், பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் என் தம்பி. தினமும் அவர் இந்த படகில் டாக்காவுக்கு வருகிறார், ஆனால் இன்று இது நடந்தது. நான் அவரது உடலைப் பார்க்க விரும்புகிறேன் - தயவுசெய்து நீங்கள் அனைவரும் எனக்கு உதவுங்கள். நான் உடலைப் பார்க்க விரும்புகிறேன் என்று பாதிக்கப்பட்டவரின் உறவினர் மோனீர் ஹொசைனின் கூறினார் .

பாதுகாப்புத் தரங்களைக் குறைக்கும் நாடான பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படகு விபத்துக்களில் இறக்கின்றனர்.

Read next: சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறு இராணுவ தளபதி மக்களை கோரியுள்ளார்.