வங்க தேசத்தின் பாதுகாப்புச் செயலாளர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு

3 days

இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் அப்துல்லா அல் மோசின் சவுத்ரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வங்காளதேச மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சவுத்ரி டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.  மேலும் உடல்நிலை மோசமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1738 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: போலந்து ஜனாதிபதி தேர்தல்! முதல் சுற்றில் முன்னிலையில் ஆண்ட்ரேஜ் துடா