தடைகளை தளர்த்துகின்றது கட்டார்

1 week

கொரோனா வைரஸ் தடைகளை எளிதாக்குவதற்கு கட்டார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டார் ஜூலை 1ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் தடைகளை சில கட்டுப்பாடுகளுடன் எளிதாக்குகிறது.

இதில் உணவகங்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது.

இதேவேளை, பொது மற்றும் தனியார் கூட்டங்களில் அதிகபட்சமாக சம்பந்தப்பட்ட  ஐந்து பேர் மாத்திரமே  அனுமதிக்கப்படுவர் என்றும், மேலும் அலுவலகங்கள் 50 சதவீத திறனில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் எனவும் நெருக்கடி நிர்வாகத்திற்கான உச்ச குழு கூறியுள்ளது.

மேலும் குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் விமானங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அடுத்த கட்டமாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Read next: சீனாவில் புதிதாக 17 பேருக்கு மீண்டும் கொரோனா