வெறுப்பை உருவாக்கும் பேச்சு: சமூக ஊடகங்களில் விளம்பரத்தை ஸ்டார்பக்ஸ் நிறுத்துகிறது

3 days

வெறுப்பை உருவாக்கும் பதிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக சில சமூக ஊடக தளங்களுக்கு வழங்கிவந்த விளம்பரங்களை  நிறுத்துவதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோகோ கோலா, டியாஜியோ மற்றும் யூனிலீவர் உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகளை தொடர்ந்து, பிரபலமான இந்த காபி நிறுவனமும் இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் இணைகிறது.

இந்த தடை யூ டியூபுக்கு பொருந்தாது, என ஒரு ஸ்டார்பக்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். தனிப்பட்ட முறையில் மற்றும் ஆன்லைனில் மூலம் சமூகங்களை ஒன்றிணைக்கமுடியும் என்பதை நாங்கள் நம்புகிறோம் என்று ஸ்டார்பக்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெறுப்பை உருவாக்கும் பேச்சு பரவுவதைத் தடுக்க தனிப்பட்ட முறையிலும் ஊடக கூட்டாளிகளுடனும், மற்றும் சிவில் உரிமை அமைப்புகளுடனும் கலந்துரையாட உள்ளோம் என்று அந்நிறுவனம் கூறியது.

சமூக ஊடக நிறுவனங்களுக்கு இதை தடுக்க அதிக பொறுப்பு இருக்கிறது என  கோகோ கோலா கூறியதை அடுத்து ஸ்டார்பக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதலில் உலகளவில் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் விளம்பரங்களை இடைநிறுத்துவதாக கோகோ கோலா கூறியது. இதை தொடர்ந்து பென் அண்ட் ஜெர்ரி 2020 ஆம் ஆண்டு முடிவு வரை அமெரிக்காவில் குறைந்தது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை நிறுத்தப்போவதாக கூறியது.

விளம்பரத்தை இடைநிறுத்துவது தவிர, #StopHateForProfit பிரச்சாரத்தில் இந்த நிறுவனம் சேராது என்று ஸ்டார்பக்ஸ் கூறியதுஇதுவரை 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் #StopHateforProfit க்கு ஆதரவாக விளம்பரங்களை இடைநிறுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்த மாதாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்க ஜூன் மாதம் ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read next: படகுடன் மோதிய பாரிய சரக்கு கப்பல்! 14 பிலிப்பைன்ஸ் நாட்டினர் மாயம்