ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

3 days

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் குல்கோஹர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து .கே 47 உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.

Read next: ஐ.நா.வின் உறுதி மொழிக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு