கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது

3 days

கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியாக இதுவரையில் 10,006,980பேர் பாதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502,208 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேசமயம் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 5,494,422 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் அதிக தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளனர்.

அங்கு 47,341 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அந்த காலப்பகுதியில் தொற்று காரணமாக 663 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2,510,728 ஆக காணப்படுகிறது. அங்கு மொத்தமாக 128,161பேர் உயிரிழந்துள்ளனர்.

அது போல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக அதிக உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக பிரேஸில் காணப்படுகின்றது.

பிரேஸிலில் 1,055 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த காலப்பகுதியில் 46,907 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு இதுவரையில் 1,319,274 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 57,149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய ரீதியாக 194,190 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 4,893 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் மண்டலங்களை பார்ப்போமாயின் அதிகப்படியாக வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் மொத்தம் 4,933,972 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. மேற்கு பசிபிக் நாடுகளில் ஆகக்குறைவாக 213,032 தொற்றுகள் பதிவாகி உள்ளது.

Read next: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை