அமெரிக்காவில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து

1 week

மெரிக்காவின் 16 மாகாணங்கள் இப்போது தொற்று பாதிப்பால் தத்தளித்து வருவதாக அந்த நாட்டின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பாசி கூறி இருக்கிறார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 40-60 வயதுகளில் உள்ளவர்களின் இறப்புவீதம்தான் அதிகமாக இருப்பதாக சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய் கட்டுப்பாட்டு மையங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் காட்டுகிறது.

அமெரிக்காவில் மட்டும் இளம் வயதினர் இறப்புவீதம் அதிகமாக இருப்பதின் பின்னணியை இங்கிலாந்து பத்திரிகைதி இகனாமிஸ்ட் சுட்டிக்காட்டுகிறது.

உடல்பருமன்தான், அமெரிக்காவில் கொரோனா பாதித்த இளம் வயதினரின் உயிரை பறிக்கும் எமனாக மாறி வருவதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க இளம்வயதினர்தான் குறைவான ஆரோக்கியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், அதற்கு காரணம் அவர்கள் உடல்பருமன் பிரச்சினைக்கு ஆளாவதுதான் என்று அந்த பத்திரிகை விளக்குகிறது.

ஐரோப்பாவை காட்டிலும் அமெரிக்காவில் இளம் வயது மக்கள்தொகை அதிகமாக இருப்பதையும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.

Read next: இனவாதிகளை தோற்கடிப்பதே தேர்தலின் பிரதான இலக்கு- ரிஷாட் பதியுதீன்