மும்பையில் இன்று முதல் முடிதிறுத்தக் கடைகள் மீண்டும் திறக்க தயாராகி வருகிறது.

1 week

மஹாராஷ்டிரா அரசாங்கம் 4 ஆம் கட்ட பணி மீண்டும் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் திறக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டதனால், மும்பையில் சனிக்கிழமையில் இருந்து முடி திருதகங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

 நாங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கை சுத்திகரிபான் வழங்குவதுடன் அவர்களின் உடல் வெப்பநிலையையும்சோதனை செய்து பதிவிட்டு வருகிறோம். மேலும் நாங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் புதிய துண்டு மற்றும் மேஜைகள் பயன்படுத்துகிறோம். என்று அந்த சலூனின் முதலாளி ஷாஹித் ஹூசைன் கூறினார்.

எங்கள் கடையில் சிகை அலங்காரங்கள் செய்பவர்கள் முகாகவசம் மற்றும் கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகின்றனர்.

நாங்கள் கையுறைகள்,கை சுத்தீகரிப்பான் பயன்படுத்துவதுடன் இடைவெளியை கடைபிடிக்க முயற்சி செய்கிறோம் என்று கடையின் முதலாளி கூறினார்.

 முடிதிருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் செயல்படுவதற்கு கடுமையான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அரசாங்க அறிவிப்பின்படி, முடிதிறுத்தகம், மற்றும் அழகு நிலையங்களில் முன்கூட்டியே பதிவு செய்து இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். முடி வெட்டுதல், முடிக்கு சாயம் போடுதல், புருவ திருத்தம் போன்ற குறிப்பிட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. தோல் சார்ந்த சேவைகள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. இந்த சட்டம் எல்லா கடைகளிலும் காணப்படுகின்றன.

முடிதிறுத்தக கடைகள் தூய்மை மற்றும் உடல் சுத்தத்தின்  (SOP) நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களான கை உறை, ஏப்ரன் மற்றும் முககவசம் போன்றவை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Read next: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின் சக்தி சாதனங்கள் பரிசோதிக்கப்படும்