எகிப்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

1 week

எகிப்தில் கொரோனா கிருமிப் பரவலால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எனினும் அந்நாட்டுப் பிரதமர் முஸ்தஃபா மட்போலி(ஆரளவயககய ஆயனடிழரடல) 25 வாடிக்கையாளர்களை மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கலாம் என்றார்.

கேளிக்கைக் கூடங்கள்இ உடற்பயிற்சிக் கூடங்கள்இ திரையரங்குகள் ஆகியவையும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் கட்டுப்பாட்டுடன் செயல்படலாம்.

கொரோனா நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட எகிப்தியப் பொருளியலை மீட்டெடுக்க அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக முயன்று வருகிறது.

அனைத்துலக பணநிதியம் எகிப்துக்குக் மேலும் 5.2 பில்லியன் டாலரைக் கடனாக வழங்க நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Read next: மும்பையில் இன்று முதல் முடிதிறுத்தக் கடைகள் மீண்டும் திறக்க தயாராகி வருகிறது.