பிரித்தானியாவில் இன்று 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கி மரணம்!

4 days

பிரித்தானியாவில் இன்று கொரோனா வைரஸ் தாக்கி 100 பேர் இறந்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இது 130 ஆக இருந்தது இதன் காரணமாக இறப்புகள் ஒப்பீடு அளவில் குறைந்து காணப்படுவதாக தெரிகிறது. இன்று இறந்தவர்களோடு கொரோனா உறுதி செய்யப்பட்ட பின்னர் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,514. இது இப்படி இருப்பினும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தவளின் படி கொரோனா தொற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவோரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் பிரித்தானியாவில் ஏறக்குறைய மொத்தம் 55,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்கலாம் என்று தெரியவருகிறது.

ஸ்காட்லாந்தை மொத்தம் 2482 பேர் இறந்துள்ளார் ஆனால் இன்று இரண்டாவது நாளாக ஒரு இறப்பும் அறிவிக்கப்படவில்லை. வெல்ஸில் புதியாக 5 இறப்புடன் மொத்தம் 1502 பெற்றுள்ளது அதேவேளையில் வட அயர்லாந்தில் புதிதாக ஒருவர் மட்டும் இறந்து மொத்தம் 549 இறப்புகளோடு உள்ளது.

26 ஜூன் 2020 மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 9,067,577 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 26 அன்று மொத்தம் 155,359 சோதனைகள் செயப்படுள்ளது. இதுவரை மொத்தம் 310,250 தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதில் இன்று மட்டும் 890 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேவேளையில் பல மில்லியன் கணக்கான வைரஸ் தொற்றுங்கள் அடையாளம் காணப்படாமல் சென்று இருக்கிறது இதற்க்கு காரணம் ஆரம்பக்கட்டத்தில் எவருக்கும் கொரோனா வைரஸ் சோதனைகள் செய்யப்படவில்லை. இப்பொழுதும் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 3,000 தொற்றுகள் ஏற்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதே வேளையில் பல பிரித்தானியர்கள் விடுமுறையை கழிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். இவ்வாறு பயணம் செய்யும் பொழுது பிரிதனைய அரசாங்கம் பச்சை, மஞ்சள் போன்ற நாடுகளுக்கு செல்வோர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபட வேண்டியது இல்லை. இருப்பினும் சிவப்பு வளைய நாடுகளுக்கு செல்வோர் 14 நாட்கள் சுயதனிமை படுத்த வேண்டும். ஸ்பெயின்,கிரீஸ், மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் மேலே குறிப்பிட்ட கிறீன் அலல்து மஞ்சள் வளையத்துக்குள் வருகின்றன அதேவேளையில் அமெரிக்கா மற்றும் இந்திய பொன்னர் நாடுகள் சிவப்பு வலயத்துக்குள் வருகிறன்றன.

தொர்புடைய தகவல்கள்:

பிரித்தானிவுக்கு வெளிந்துகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தொற்றுக்களில் பாகிஸ்தானில் இருந்து தான் அதிக அளவிலான தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகமாக தொற்றுகள் ஏற்படும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கடுமையான தனிமைப்படுத்துதல் சட்டத்தை கொண்டுவர வேண்டும். என்று வலியுறுத்தப்படுகிறது,.

இங்கிலாந்தில் உள்ள கருப்பு மற்றும் சிறுபான்மையரில் உள்ள கர்ப்பமாக உள்ள பெண்கள் சிறிய கோவிட் -19 அறிகுறிகள் இருக்கும் பொழுதே மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் நமையில் ஒகஸ்போர்ட பல்கலைக்கழக ஆய்வில் கருப்பு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் கோவிட் -19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டால் என்று தெரிய வந்ததே ஆகும்.

பிரித்தனையாவில் மேலும் 30,000 பேர் கோவிட் -19 தாக்கி இறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சில சுயாதீன வல்லுநர்கள் அறிவித்து உள்ளார்கள்.

இது இப்படி இருக்க ஜூலை 4 திகதி மதுபான நிலையங்கள், உணவகங்கள், திரை அரங்குகள், கலாச்சார நிலையங்கள் போன்றவை திறக்க இருப்பதால் தொற்றுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் ட்ராக் அண்ட் ட்ரஸ் செயலி இன்னமும் முழுமையாக செய்லபட ஆரம்பிக்க வில்லை

Read next: இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து சீனா தனது வீரர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளது!