கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம்

5 days

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் வேளையில், விக்டோரியா மாநிலத்தில் சனிக்கிழமையன்று 41 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணப்பட்ட தினசரி விகிதத்தை விட இது இருமடங்காகும், இதனால் அந்த மாநிலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடுகிறது,

அதே நேரத்தில், நிலைமை சீரடைந்து வருவதால், நாட்டின் பிற பகுதிகள் சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றன.

நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியா, கடந்த 11 நாட்களாக தினமும், புதிய நோயாளிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது மெல்போர்னின் புறநகர்ப்பகுதிகளில் ஏற்பட்ட பரவலுடன் இது தொடர்புடையது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மொத்த 270 நோயாளிகளில் 204 பேர் விக்டோரியாவில் உள்ளனர்.

நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம் என்று விக்டோரியாவின் துணை தலைமை சுகாதார அதிகாரி ஆன்னலீஸ் வான் டைமன் கூறினார்.

புதிய நோயாளிகளில் ஒருவர் விக்டோரியாவுக்கு திரும்பி வந்த பயணி. நாடு திரும்பும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்பட வேண்டியது கட்டாயம். ஆனால் விக்டோரியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தனிமைப்படுத்தப்படுத்துதல் முடிவுறும் போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுத்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் சனிக்கிழமையன்று ஆறு பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக்கு உட்பட மறுக்கும் பயணிகள் மேலும் 10 நாட்கள் கூடுதலாக தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Read next: விதிகளை மீறும் செய்திகளை ஃபேஸ்புக் தடை செய்ய முடிவு