கொரோனா வைரஸ் தாக்கி ஊடகவியலாளர் பலி

5 days

கொரோனா தொற்றுக் காரணமாக, இந்திய தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரான வேல்முருகன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் ஊடகவியலாளர் இவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் கொரோனா தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று சென்னையில் பரவ ஆரம்பித்ததுமே முன்களப் பணியாளர்கள் பலருடன் ஏராளமான ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் வீடு திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read next: சீனாவில் வெள்ளப்பெருக்கு